திராவிடம் அமைத்த வள்ளுவன் சிலை!

நூற்றி முப்பத்தி மூன்று என்பது வெறும் எண் அல்ல. தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கிய ஆரிய இந்துத்துவத்திற்கு எதிர்வினை காட்டும் விதமாக திராவிடம் அமைத்த திருவள்ளுவர் சிலையின் அளவு 133 அடி.

ஐயன் திருவள்ளுவர் சிலை, குமரிக் கடலின் முனையில் நின்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் ஒரு செய்தி சொல்கிற மாதிரி அல்லவா அமைந்திருக்கிறது?

பிரம்மாண்டத்தின் மறு உருவம் வள்ளுவனின் சிலை. அதை பார்க்கும் போது பிரமிக்காமல் எப்படி இருக்க முடியும்?

இப்பொழுது சிலையின் முழு சிறப்புகளையும் பார்ப்போம்!

சிலை அமைப்பு:

திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக்கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.

சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.

மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

சிலை குறிப்புகள்:

மொத்த சிலையின் உயரம் - 133 அடி
சிலையின் உயரம் - 95 அடி
பீடத்தின் உயரம் - 38 அடி
சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
சிலையின் மொத்த எடை - 7,000 டன்
சிலையின் எடை - 2,500 டன்
பீடத்தின் எடை - 1,500 டன்
பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்

சிலை அளவுகள்:

முக உயரம் - 10 அடி
கொண்டை - 3 அடி
முகத்தின் நீளம் - 3 அடி
தோள்பட்டை அகலம் - 30 அடி
கைத்தலம் - 10 அடி
உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
இவ்வாறு சிலை வைக்கப் பெற்று தமிழரின் மாண்பு காக்கும் குறியீடாக, தமிழர் கடலில் உயர்ந்து நின்றது திருவள்ளுவரின் திருவுருவச் சிலை.

நிறையும், அழிக்காத குணம் கொண்ட தமிழனின் மாண்பு அதைவிட சிறப்பாக ஒன்றை உருவாக்கித் தன் இனத்தின் பெருமையை நிலைநாட்டிக் காட்டிய இடம் தான் கன்னியாகுமரி. திராவிடம் இருக்கும் வரை அந்தச் சிலையும் வானுயர்ந்து நிற்கும் குமரியில். இது மட்டுமல்லாமல் திராவிட திருக்குறள் ஆங்கிலேயருக்குப் பின் காத்து வந்த பல கதைகளும் உண்டு.

அவற்றை வருங்காலத்தில் காண்போம்.

ஒவ்வொரு தமிழனும் ஒருமுறையாவது சென்று காண வேண்டிய அறிய கலைச் சின்னமே திருவள்ளுவர் சிலை.

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

--
திராவிடன்

Tags